பாராசிட்டமால் மாத்திரை (அசெட்டமினோஃபென்) காய்ச்சலைக் குறைக்கப் பயன்படும்
இது பல் வலி, உடல் வலி, தலை வலி, வலிமிகுந்த மாதவிடாய் காலங்கள், மூட்டு வலி, கீல்வாதம் வலி, தசைக்கூட்டு வலி ஆகியவற்றிற்கு வலி நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது
- வலி நிவாரணி
- காய்ச்சல் நிவாரணி
பாராசிட்டமால் மாத்திரையை எவ்வாறு எடுத்துக்கொள்வது
உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த நேரத்தில் உணவு உண்ட பின் பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளுங்கள்.
தண்ணீருடன் மாத்திரையை முழுவதுமாக விழுங்கவும், மெல்லவோ அல்லது உடைக்கவோ வேண்டாம்.
உணவுக்குப் பிறகு அல்லது பால் குடித்த பிறகு எடுத்துக்கொண்டால் வயிற்று உபாதைகளைத் தவிர்க்கலாம்
பாராசிட்டமால் எப்படி வேலை செய்கிறது
நம் உடலுக்கு வலி மற்றும் காய்ச்சலை (அதிகரித்த வெப்பநிலை) ஏற்படுத்தும் ப்ரோஸ்டாகிளாண்டின்ஸ் என்ற இரசாயனத்தை தடுத்து வலி மற்றும் காய்ச்சல் நிவாரணியாக செயல்படுகிறது
கர்ப்பகால தொடர்பு
கர்ப்பம் மற்றும் பாலூட்டும் போது பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது அல்ல.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன் தங்கள் மருத்துவர்களை அணுக வேண்டும்
அறிவுரை
- இந்த மருந்தின் அதிகப்படியான அல்லது தேவையற்ற பயன்பாடு வயிற்றில் இரத்தப்போக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்
- இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் இரண்டு மணிநேர இடைவெளிக்குப் பிறகு ஆன்டாசிட்களை எடுத்துக் கொள்ளுங்கள்
- கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்லீரல் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான மருத்துவ மேற்பார்வை அவசியம்
பாராசிட்டமால் பக்க விளைவுகள்
- குமட்டல் மற்றும் வாந்தி
- வயிற்று வலி
- தோல் வெடிப்பு
- அரிப்பு
- சோர்வு
- மூச்சுத்திணறல்
- உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம்
- வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு
- ஒவ்வாமை தோல் எதிர்வினைகள்
- சேதமடைந்த கல்லீரல் அல்லது சிறுநீரகம் (அதிக அளவு எடுத்துக்கொண்டால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்று மருத்துவ உதவி பெறவும்)
எச்சரிக்கைகள்
- பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் போது மது அருந்துவது பாதுகாப்பற்றது
- உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவு அட்டவணையைப் பின்பற்றவும்
- அதிகப்படியான அளவு கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம்
பாராசிட்டமால் மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு, பின்வரும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்துக்கொண்டால் உங்கள் மருத்துவரிடம் அதை தெரிவித்து ஆலோசனை பெறுங்கள்
- இரத்த மெலிவூட்டி (பிளட் தின்னர்)
- கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தும் மருந்துகள்
- மற்ற வலி நிவாரணிகள்
- வாந்தி அல்லது குமட்டல் மருந்துகள்
மருத்துவ நோய் தொடர்பு
- கல்லீரல் அல்லது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாராசிட்டமால் மாத்திரையை மருத்துவரின் பரிந்துரைப்படி எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்
- பசியின்மை (உணவுக் கோளாறு), ஊட்டச்சத்து குறைபாடு, மது துஷ்பிரயோகம், நீரிழப்பு (உடலில் நீர் அளவு குறைவு) ஆகியவற்றால் பிரச்சனைகள் இருந்தால், இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
விவரங்கள்
- வேதியியல் வகுப்பு : பி-அமினோபீனால் வழித்தோன்றல்
- போதை பழக்கத்தை உருவாக்கும் மருந்து : இல்லை
- சிகிச்சை வகுப்பு : வலி நிவாரணிகள்
- செயல் வகுப்பு : வலி நிவாரணி மற்றும் ஆண்டிபைரடிக் (உடல் வெப்பம் தணிப்பி)
- 30 ° C க்கும் குறைவான வெப்பநிலையில் உலர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் சேமிக்கவும்
எந்தவொரு உடல்நலம், மருத்துவ நிலைமை, அவற்றின் நோயறிதல் அல்லது சிகிச்சை குறித்து எப்போதும் ஒரு மருத்துவரை அணுகவும்.
உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள், இந்த தளத்தில் நீங்கள் பார்த்த அல்லது படித்தவற்றின் காரணமாக அதைப் புறக்கணிக்காதீர்கள்.
உங்கள் மருத்துவரால் கொடுக்கப்பட்ட முறையான மருந்துச்சீட்டுடன் மருந்துகளின் காலாவதி தேதியை சரிபார்த்த பிறகு வாங்குங்கள்.