மெட்ஃபார்மின் மருந்து வகை 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது
இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் சிறுநீரக பாதிப்பு மற்றும் குருட்டுத்தன்மை போன்ற நீரிழிவு நோயின் தீவிர சிக்கல்களைத் தடுக்கிறது.
பெண்களில் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) எனப்படும் மாதவிடாய் தொடர்பான கோளாறுக்கு சிகிச்சையளிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
மெட்ஃபார்மின் மாத்திரை பயன்கள்
- வகை 2 நீரிழிவு நோய்க்கான சிகிச்சை
- பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) சிகிச்சை
மெட்ஃபார்மின் மாத்திரையை எவ்வாறு பயன்படுத்துவது
உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில், உணவு உண்ட பின் மெட்ஃபார்மின் மாத்திரையை எடுத்துக்கொள்ளவும்
ஒரு கண்ணாடி கோப்பை அளவு தண்ணீருடன் மாத்திரையை முழுவதுமாக விழுங்கவும், மெல்லவோ, நசுக்கவோ அல்லது உடைக்கவோ வேண்டாம்
மெட்ஃபார்மின் எவ்வாறு வேலை செய்கிறது
மெட்ஃபார்மின் ஒரு நீரிழிவு எதிர்ப்பு மருந்தாகும்.
இது கல்லீரலில் சர்க்கரை (குளுக்கோஸ்) உற்பத்தியைக் குறைத்து, உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, குடலில் இருந்து சர்க்கரையை உடல் செல்கள் உறிஞ்சுவதைத் தாமதப்படுத்துகிறது.
இவ்வாறு உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
கர்ப்ப கால தொடர்பு
கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மெட்ஃபார்மின் மாத்திரைகளைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை அணுகவும்.
மெட்ஃபார்மின் பக்க விளைவுகள்
- வயிற்றுப்போக்கு
- தலைவலி
- வாந்தி
- குமட்டல்
- வாய்வு
- வயிற்று அசௌகரியம்
- பலவீனம்
- செரிமான பிரச்சனைகள்
- வயிற்று வலி
- பசியின்மை
பாதுகாப்பு
- மற்ற நீரிழிவு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், இந்த மருந்தில் எடை அதிகரிப்பு மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான வாய்ப்புகள் குறைவு
- தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள், ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்
- மெட்ஃபார்மின் மருந்தை நீண்டகாலமாக பயன்படுத்துவதால் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படலாம். இதனால் உங்களுக்கு வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படுலாம்.
- வைட்டமின் பி12 குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கலாம், இதனால் சோர்வு, வெளிர் தோல், மூச்சுத்திணறல் அல்லது தலைவலி ஏற்படலாம். இவற்றில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்
- இந்த மருந்தை மற்ற நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள், மதுபானம் ஆகியவற்றுடன் பயன்படுத்தும்போது அல்லது உணவு உண்பதை தாமதப்படுத்தினாலோ, தவறவிட்டாலோ குறைந்த இரத்த சர்க்கரை அளவு ஏற்படலாம்
- குளிர் வியர்வை, வெளிர் சருமம், நடுக்கம் மற்றும் பதட்டம் போன்ற இரத்தச் சர்க்கரைக் குறைவு அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால், எப்போதும் சில சர்க்கரை உணவுகள் அல்லது பழச்சாறுகளை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்
- இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும்போது உங்கள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்கவும். மருத்துவர் உங்கள் கல்லீரல் செயல்பாட்டை தவறாமல் சரிபார்க்கவேண்டும்.
- விரைவான சுவாசம், தொடர் குமட்டல், வாந்தி, வயிற்று வலி போன்றவற்றை நீங்கள் அனுபவித்தால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும், ஏனெனில் மெட்ஃபார்மின் லாக்டிக் அமிலத்தன்மை எனப்படும் அரிதான ஆனால் தீவிரமான நிலையை ஏற்படுத்தலாம் (இரத்தத்தில் லாக்டிக் அமிலம் அதிகரித்தல்).
தற்காப்பு நடவடிக்கைகள்
- மது அருந்துவதை தவிர்க்கவும் ஏனெனில் மது ஏதேனும் தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகள் அல்லது குறைந்த இரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்தலாம்
- நீங்கள் எப்போதாவது ஒரு முறை மருந்தளவை தவறவிட்டால், தவறிய மருந்தளவைத் தவிர்த்துவிட்டு, பரிந்துரைக்கப்பட்டபடி உங்கள் வழக்கமான அட்டவணையைப் பின்பற்றவும், மருந்தளவை இரண்டு மடங்கு எடுத்துக்கொள்ளாதீர்கள்.
- மெட்ஃபார்மின் மருந்து 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் எடுத்துக்கொள்ளக்கூடாது. 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, மருந்தளவு மருத்துவரால் பரிந்துரைக்கப்படும்.
கீழ்வரும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொண்டால், மெட்ஃபார்மின் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்
- மற்ற நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள்
- நீர் மாத்திரை (டையூரிடிக்)
- தைராய்டு ஹார்மோன்
மருந்து நோய் தொடர்பு
உங்களுக்கு
- கடுமையான சிறுநீரக நோய்
- நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ்
- வளர்சிதை மாற்ற அமிலத்தன்மை
- நீரிழப்பு, தொற்று, கல்லீரல் அல்லது சிறுநீரகப் பிரச்சனைகள்
- கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய்
- இதயப் பிரச்சனைகள்
- குறைந்த அளவு வைட்டமின் பி12
இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும் இருந்தால் மெட்ஃபார்மின் எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
விவரங்கள்
- இரசாயன வகுப்பு: பிகுவானைட்ஸ் வழித்தோன்றல்
- போதை பழக்கத்தை உருவாக்கும் மருந்து : இல்லை
- சிகிச்சை வகுப்பு : நீரிழிவு எதிர்ப்பு சார்ந்த
- அட்டவணை “எச்” பரிந்துரைக்கப்பட்ட மருந்து : பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் சமீபத்திய முறையான பரிந்துரை இல்லாமல் இந்த மருந்தை சில்லறை மருத்துவக் கடைகள் அல்லது ஆன்லைன் மருந்தகங்களில் விற்கக்கூடாது.
- அட்டவணை “ஜி” பரிந்துரைக்கப்பட்ட மருந்து : மருத்துவ மேற்பார்வை இல்லாமல் இந்த மருந்தை உட்கொள்வது ஆபத்தானது
- ஒளி மற்றும் ஈரப்பதம் இல்லாத இடத்தில் மருந்தை வைக்கவும்
- குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்
எந்தவொரு உடல்நலம், மருத்துவ நிலை, நோயறிதல் அல்லது சிகிச்சை குறித்து எப்போதும் மருத்துவரை அணுகவும்.
உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள், இந்தத் தளத்தில் நீங்கள் பார்த்த அல்லது படித்தவற்றின் காரணமாக அதைப் புறக்கணிக்காதீர்கள்.