அமோக்ஸிசிலின் மருந்து பல்வேறு பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது
தொண்டை, காது, சைனஸ், சுவாசப் பாதை, சிறுநீர் பாதை, தோல், மென்மையான திசு, மற்றும் டைபாய்டு காய்ச்சல் ஆகிய உடல் தொற்றுகளுக்கு இது சிகிச்சையளிக்கப் பயனுள்ளதாக இருக்கும்
அமோக்ஸிசிலின் மாத்திரை பயன்கள்
- பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சை
அமோக்ஸிசிலின் மாத்திரையை எவ்வாறு பயன்படுத்துவது
உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்பதற்கு முன் அல்லது பின் அமோக்ஸிசிலின் மாத்திரையை எடுத்துக்கொள்ளவும்
ஒரு கண்ணாடி கோப்பை அளவு தண்ணீருடன் மாத்திரையை முழுவதுமாக விழுங்கவும், மெல்லவோ, நசுக்கவோ அல்லது உடைக்கவோ வேண்டாம்
அமோக்ஸிசிலின் எவ்வாறு வேலை செய்கிறது
அமோக்ஸிசிலின் ஒரு ஆண்டிபயாடிக் மருந்து. பாக்டீரியாக்கள் உயிர்வாழத் தேவையான பாக்டீரியா பாதுகாப்பு செல் சுவர் உருவாவதைத் தடுப்பதன் மூலம் இது பாக்டீரியாவைக் கொன்று தொற்றுக்கு சிகிச்சை அளிக்கிறது.
கர்ப்ப கால தொடர்பு
கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அமோக்ஸிசிலின் மாத்திரைகளைத் தங்கள் மருத்துவரின் பறித்துரைப்பின்படி எடுத்துக்கொள்ளலாம்.
அமோக்ஸிசிலின் பக்க விளைவுகள்
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- குமட்டல்
- தோல் வெடிப்பு
பாதுகாப்பு
- நீங்கள் நன்றாக உணர ஆரம்பித்தாலும், பரிந்துரைக்கப்பட்ட அமோக்ஸிசிலின் மருந்தின் அளவை முடிக்கவும். முன்கூட்டியே அதை நிறுத்தினால், தொற்று மீண்டும் வரலாம் மற்றும் சிகிச்சையளிப்பது கடினம் ஆகலாம்
- பக்கவிளைவாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அமோக்ஸிசிலின் உடன் புரோபயாடிக்குகளை எடுத்துக்கொள்வது உதவலாம். மலத்தில் இரத்தம் அல்லது வயிற்றுப் பிடிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்
- அரிப்பு, முகம், தொண்டை, நாக்கில் வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக இந்த மருந்து உட்கொள்வதை நிறுத்தி உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்
தற்காப்பு நடவடிக்கைகள்
- மது அருந்துவதை தவிர்க்கவும் ஏனெனில் மது ஏதேனும் தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்
- நீங்கள் எப்போதாவது ஒரு முறை மருந்தளவை தவறவிட்டால் கூடிய விரைவில் அதனை எடுத்துக் கொள்ளுங்கள்
- அடுத்த மாத்திரையை எடுத்து கொள்ள நேரம் ஆகிவிட்டால், தவறிய மருந்தளவைத் தவிர்த்துவிட்டு, பரிந்துரைக்கப்பட்டபடி உங்கள் வழக்கமான அட்டவணையைப் பின்பற்றவும், மருந்தளவை இரண்டு மடங்கு எடுத்துக்கொள்ளாதீர்கள்.
- அமோக்ஸிசிலின் மருந்தை குழந்தை மருத்துவரின் பரிந்துரைப்பின்படி பாதுகாப்பாகக் கொடுக்கலாம். குழந்தை மருத்துவரின் ஆலோசனையின்றி கொடுக்கக் கூடாது
கீழ்வரும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொண்டால், அமோக்ஸிசிலின் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்
- பென்சிலின் நுண்ணுயிர் எதிர்ப்பிகள்
- இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள்
- யூரிக் அமிலத்தைக் குறைக்கும் மருந்துகள்
- புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள்
- மூட்டுவலி எதிர்ப்பு மருந்து
மருந்து நோய் தொடர்பு
உங்களுக்கு பெருங்குடல் அழற்சி, சுரப்பி காய்ச்சல் மற்றும் சிறுநீரக நோய் மற்றும் குடிப்பழக்கம் இருந்தால் அமோக்ஸிசிலின் எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
விவரங்கள்
- இரசாயன வகுப்பு: அமினோபெனிசிலின்ஸ்
- போதை பழக்கத்தை உருவாக்கும் மருந்து : இல்லை
- சிகிச்சை வகுப்பு : தொற்று எதிர்ப்பு சார்ந்த
- அட்டவணை “எச்” பரிந்துரைக்கப்பட்ட மருந்து : பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் சமீபத்திய முறையான பரிந்துரை இல்லாமல் இந்த மருந்தை சில்லறை மருத்துவக் கடைகள் அல்லது ஆன்லைன் மருந்தகங்களில் விற்கக்கூடாது.
- ஒளி மற்றும் ஈரப்பதம் இல்லாத இடத்தில் மருந்தை வைக்கவும்
- குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்
எந்தவொரு உடல்நலம், மருத்துவ நிலை, நோயறிதல் அல்லது சிகிச்சை குறித்து எப்போதும் மருத்துவரை அணுகவும்.
உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள், இந்தத் தளத்தில் நீங்கள் பார்த்த அல்லது படித்தவற்றின் காரணமாக அதைப் புறக்கணிக்காதீர்கள்.