டிக்டாக் தடை அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை 19 ஜனவரி 2025 அன்று அமல்படுத்தப்பட்டது
அதிபர் டிரம்ப் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த தடை அமலுக்கு வந்தது
டிக்டாக் தடையால் யாருக்கு லாபம், அது நீடிக்குமா அல்லது ஜனாதிபதி டிரம்ப் தடையை திரும்பப் பெறுவார்
டிக்டாக் தடையால் யாருக்கு லாபம், அது நீடிக்குமா அல்லது அதிபர் டிரம்ப் தடையை ரத்து செய்வாரா, நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
டிக்டாக் செயலி ஏன் தடை செய்யப்படுகிறது?
டிக்டாக் செயலி பைட் டான்ஸ் எனப்படும் சீன நிறுவனத்துக்குச் சொந்தமானது
டிக் டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்குவதுடன்,தங்கள் மக்களின் தரவு மற்றும் தகவல்களை சீன அரசாங்கத்திடம் பகிர்ந்து விடுமோ என்ற பயத்தில் தடை செய்யப்பட்டுள்ளது
டிக் டாக் அமெரிக்க மக்களிடம் தவறான தகவல்களையும், உண்மையற்ற செய்திகளையும் பரப்புவதற்கு பயன்படுத்தப்படும் கருவி ஆகிவிடும் என்று அமெரிக்க நிபுணர்கள் பயம் தெரிவிக்கின்றனர்
அமெரிக்க மக்கள் தங்களுடைய தரவுகள் மற்றும் தகவல்கள் யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதை தாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும், தங்கள் அரசாங்கம் முடிவு செய்யக்கூடாது என்று கூறுகின்றனர்
தடைக்கு டிக்டாக் பயனர்களின் எதிர்வினை
டிக் டாக் செயலியை நம்பி பல அமெரிக்க மக்களின் வாழ்வாதாரம் உள்ளது.
டிக் டாக் பயனர்கள் அனைவரும் கூறும் ஒரே விஷயம் “நாங்கள் இந்த தடைக்கு ஒப்புக்கொள்ளவில்லை” என்பதுதான்.
இந்த செயலியை தடை செய்துவிட்டால் லாபம் அமெரிக்க நிறுவனங்களான மெட்டா, ட்விட்டர், அமேசான் மற்றும் யூடியூப் என இளம் அமெரிக்கர்கள் கூறுகின்றனர்
மற்ற செயலிகளை அரசாங்கம் தடை செய்வதால் எலான் மஸ்க், மார்க் ஸக்கர்பேர்க் போன்ற பெரும் முதலாளிகளுக்கும், கூகுள், அமேசான் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தான் லாபம் என்ற அமெரிக்க மக்கள் கூறுகின்றனர்
இத்தடையினால் அமெரிக்க கார்ப்பரேட் தொழில்நுட்ப நிறுவனங்களும், பெரும் முதலாளிகளும், சமூக ஊடகங்கள் மீது ஒரு பெரிய ஆதிக்கம் செலுத்துவதை நாம் அனுமதிக்கிறோம் என்றும் கூறுகிறார்கள்
டிக்டாக் பயனர்கள் அடுத்து எங்கு செல்வார்கள்
2024 ஆம் ஆண்டில் டிக் டாக்கின் விளம்பர வருவாய் 13 பில்லியன் டாலராக இருந்தது.
இந்த செயலியை அமெரிக்காவில் 17 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள்.
டிக் டாக் தடை செய்யப்பட்டால் அதன் 50 சதவீத பயனாளர்கள் இன்ஸ்டாகிராம், மெட்டா மற்றும் யூடியூபிற்கு சென்று விடுவர் என்று அமெரிக்க சந்தை நிபுணர்கள் கணிக்கிறார்கள்
மீதமுள்ள 50 சதவீத பயனாளர்கள் ஸ்னாப்சாட், நெட்பிலிக்ஸ், அமேசான், வால்மார்ட், ஸ்பாட்டிபை போன்ற மற்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கி விடுவார்கள் என்று கணிக்கப்பட்டது
ரெட் நோட் செயலி மற்றும் ஜனாதிபதி டிரம்ப்
டிக் டாக்கில் பெரும்பாலான பயனர்கள், அமெரிக்க செயலிகளுக்கு செல்லாமல், மீண்டும் ஜியாவுஹாங்ஷூ என்ற மற்றொரு சீன நிறுவனத்தின் செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்
அமெரிக்காவின் 47 வது பிரதமராக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 20 ஜனவரி 2025 அன்று பதவியேற்றார்
அவர் பதவியேற்கும் விழாவில் பைட் டான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பங்கேற்றார்
இச்சம்பழத்தின் மூலம் டிக் டாக் செயலி தற்காலிகமாக தான் தடை செய்யப்பட்டுள்ளது அது மீண்டும் ஒரு அமெரிக்க நிறுவனமாக புதுப்பிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று நம்புவோம்