ஆஸ்பிரின் அசிடைல்சாலிசிலிக் அமிலம் (ASA) என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த மருந்து உங்கள் இரத்த நாளங்களில் இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.
இது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான மார்பு வலி (ஆஞ்சினா) ஆகியவற்றைத் தடுக்க பயன்படுத்தப்படும் மருந்தாகும்.
ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள்
- இதயம் தொடர்பான மார்பு வலி தடுப்பு (ஆஞ்சினா)
- மாரடைப்புக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு
- பக்கவாதம் சிகிச்சை மற்றும் தடுப்பு
ஆஸ்பிரின் மாத்திரையை எவ்வாறு பயன்படுத்துவது
உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ட பின் ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்துக்கொள்ளவும்
ஒரு கண்ணாடி கோப்பை அளவு தண்ணீருடன் மாத்திரையை முழுவதுமாக விழுங்கவும், மெல்லவோ, நசுக்கவோ அல்லது உடைக்கவோ வேண்டாம்
ஆஸ்பிரின் எவ்வாறு வேலை செய்கிறது
ஆஸ்பிரின் ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து (என்.எஸ்.ஏ.ஐ.டி). இது இரத்த அணுக்கள் (பிளேட்லெட்டுகள்) ஒன்றாக ஒட்டிக்கொண்டு இரத்த உறைவு அல்லது இரத்தக் கட்டிகள் உருவாவதை தடுகிறது.
இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
கர்ப்ப கால தொடர்பு
கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆஸ்பிரின் மாத்திரைகளைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை அணுகவும் ஏனெனில் அது உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
ஆஸ்பிரின் பக்க விளைவுகள்
- நெஞ்செரிச்சல்
- அதிகரித்த இரத்தப்போக்கு
- வயிற்று வலி
- சிராய்ப்பு
- காது கேட்பதில் சிரமம்
- காதுகளில் ஒலி
- சிறுநீரின் அளவு மாற்றம்
- தொடர்ந்து அல்லது கடுமையான குமட்டல், வாந்தி
- விவரிக்க முடியாத சோர்வு
- மயக்கம்
- இருண்ட நிற சிறுநீர்
- மஞ்சள் காமாலை
பாதுகாப்பு
- வயிற்றுக் கோளாறுகளைத் தவிர்க்க ஆஸ்பிரின் மாத்திரையை உணவுடன் எடுத்துக் கொள்ளுங்கள்
- இது உங்களுக்கு எளிதாக இரத்தம் வரச் செய்யலாம். கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தும்போது, விரல் அல்லது கால் நகங்களை வெட்டும்போது கவனமாக இருங்கள்
- உங்கள் வாந்தியில் இரத்தம் இருப்பதைக் கண்டாலோ அல்லது கருப்பு நிற மலம் கழித்தாலோ உங்கள் மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்கவும்
- உங்கள் காதுகளில் சத்தம், அசாதாரண இரத்தப்போக்கு, குமட்டல் அல்லது வாந்தி நீங்காமல் இருந்தால் மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டு உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்
தற்காப்பு நடவடிக்கைகள்
- இந்த மருந்தை உட்கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்கவும். நீங்கள் மது அருந்தினால் உங்கள் வயிற்றில் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்
- நீங்கள் எப்போதாவது ஒரு முறை மருந்தளவை தவறவிட்டால் கூடிய விரைவில் அதனை எடுத்துக் கொள்ளுங்கள்
- அடுத்த மாத்திரையை எடுத்து கொள்ள நேரம் ஆகிவிட்டால், தவறிய மருந்தளவைத் தவிர்த்துவிட்டு, பரிந்துரைக்கப்பட்டபடி உங்கள் வழக்கமான அட்டவணையைப் பின்பற்றவும், மருந்தளவை இரண்டு மடங்கு எடுத்துக்கொள்ளாதீர்கள்
- 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் பாதுகாப்பானது அல்ல, இது தொடர்பாக உங்கள் மருத்துவரை அணுகவும்.
கீழ்வரும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொண்டால், ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்
- இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள்
- நோயெதிர்ப்பு சக்தி தொடர்பான மருந்துகள்
- உயர் இரத்த அழுத்த மாத்திரைகள்
- இதய நோய் தொடர்பான மாத்திரைகள்
- மன அழுத்த எதிர்ப்பு
- வலி நிவாரணிகள்
- வலிப்பு நோய் எதிர்ப்பு மருந்து
- புற்றுநோய் எதிர்ப்பு அல்லது கீல்வாத எதிர்ப்பு மருந்து
- நீரிழிவு எதிர்ப்பு மாத்திரைகள்
- கருக்கலைப்பு மாத்திரை
- அசிடசோலமைடு
- எலும்புப்புரை தொடர்புடைய மருந்துகள்
மருந்து நோய் தொடர்பு
- இரத்தம் உறைதல் கோளாறு
- இரத்தப்போக்கு கோளாறு
- வான்-வில்பிரான்ட்ஸ் நோய்
- டெலங்கியெக்டேசியா (சிறிய, சேதமடைந்த இரத்த நாளங்கள் தோலில் சிவப்பு, நீலம் அல்லது ஊதா கோடுகளாக தோன்றும்)
- ஆஸ்துமா
- கல்லீரல் அல்லது சிறுநீரகப் பிரச்சனை
- வயிறு அல்லது குடல் புண்
- மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடிய கடுமையான இதயப் பிரச்சனைகள்
உள்ளவர்களுக்கு ஆஸ்பிரின் பரிந்துரைக்கக் கூடாது. உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
விவரங்கள்
- இரசாயன வகுப்பு: அசில்சாலிசைலிக் அமிலத்தின் வழித்தோன்றல்
- போதை பழக்கத்தை உருவாக்கும் மருந்து : இல்லை
- சிகிச்சை வகுப்பு : இரத்தம் சார்ந்த
- அட்டவணை “எச்” பரிந்துரைக்கப்பட்ட மருந்து : பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் சமீபத்திய முறையான பரிந்துரை இல்லாமல் இந்த மருந்தை சில்லறை மருத்துவக் கடைகள் அல்லது ஆன்லைன் மருந்தகங்களில் விற்கக்கூடாது.
- ஒளி மற்றும் ஈரப்பதம் இல்லாத இடத்தில் மருந்தை வைக்கவும்
- குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்
எந்தவொரு உடல்நலம், மருத்துவ நிலை, நோயறிதல் அல்லது சிகிச்சை குறித்து எப்போதும் மருத்துவரை அணுகவும்.
உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள், இந்தத் தளத்தில் நீங்கள் பார்த்த அல்லது படித்தவற்றின் காரணமாக அதைப் புறக்கணிக்காதீர்கள்.