மெட்ரோனிடசோல் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் மருந்து (ஆண்டிபயாடிக்). பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்றுகளுக்கு எதிராக உங்கள் உடல் செயல்பட இந்த மருந்து உதவுகிறது.
மெட்ரோனிடசோல் மாத்திரை கல்லீரல், வயிறு, குடல், பிறப்புறுப்பு, மூளை, இதயம், நுரையீரல், எலும்புகள் மற்றும் தோல் ஆகியவற்றின் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
மெட்ரோனிடசோல் மாத்திரை பயன்கள்
- பாக்டீரியா தொற்று சிகிச்சை
- ஒட்டுண்ணி நோய்த்தொற்று சிகிச்சை
மெட்ரோனிடசோல் மாத்திரையை எவ்வாறு பயன்படுத்துவது
உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ட பின் மெட்ரோனிடசோல் மாத்திரையை எடுத்துக்கொள்ளவும்
ஒரு கிளாஸ் தண்ணீருடன் மாத்திரையை முழுவதுமாக விழுங்கவும், மெல்லவோ, நசுக்கவோ அல்லது உடைக்கவோ வேண்டாம்
மெட்ரோனிடசோல் எவ்வாறு வேலை செய்கிறது
உடலில் தொற்றுநோய்களை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளின் டி.என்.ஏ வை (மரபணு கடத்தி) மெட்ரானிடசோல் சேதப்படுத்தி அவற்றை அழிக்கிறது.
கர்ப்ப கால தொடர்பு
கர்ப்ப காலத்தில் மெட்ரோனிடசோல் மாத்திரைகளை பயன்படுத்துவதா அல்லது வேண்டாமா என்பதை உங்கள் மருத்துவரிடம் ஆலோசனையை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனை பெறாமல் இந்த மருந்தை எடுத்து கொள்ளாதீர்கள்
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மெட்ரோனிடசோல் மாத்திரையைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல, சரியான சிகிச்சையைப் பெற உங்கள் மருத்துவரை அணுகவும்.
மெட்ரோனிடசோல் பக்க விளைவுகள்
- தலைவலி
- வாயில் வறட்சி
- குமட்டல்
- வாயில் உலோக சுவை
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- வயிற்றுவலி
- உண்ணும் கோளாறு
பாதுகாப்பு
- நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- இந்த மருந்தை அதிக அளவு அல்லது நீண்ட காலம் பயன்படுத்தினால் நரம்பு பாதிப்பு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்தளவை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.
- மெட்ரோனிடசோலை தவறாக பயன்படுத்தினால் அது புற்றுநோயை உண்டாக்கலாம் எனவே தேவையில்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்கவும்
தற்காப்பு நடவடிக்கைகள்
- மெட்ரோனிடசோல் எடுத்துக் கொள்ளும்போது மது அருந்துவது சிவத்தல், அதிகரித்த இதயத் துடிப்பு, குமட்டல், தாகம், மார்பு வலி மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.
- இந்த மருந்துடன் சிகிச்சையின் போது மற்றும் சிகிச்சை முடிந்து 2-3 நாட்களுக்கு மது அருந்த வேண்டாம் இல்லையேல் குமட்டல், வாந்தி, சிவத்தல் மற்றும் தலைவலி ஆகிய தேவையற்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
- நீங்கள் எப்போதாவது ஒரு முறை மருந்தளவை தவறவிட்டால் கூடிய விரைவில் அதனை எடுத்துக் கொள்ளுங்கள்
- அடுத்த மாத்திரையை எடுத்து கொள்ள நேரம் ஆகிவிட்டால், தவறிய மருந்தளவைத் தவிர்த்துவிட்டு, பரிந்துரைக்கப்பட்டபடி உங்கள் வழக்கமான அட்டவணையைப் பின்பற்றவும், மருந்தளவை இரண்டு மடங்கு எடுத்துக்கொள்ளாதீர்கள்.
- மெட்ரோனிடசோல் மருந்தை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகக் கொடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி கொடுக்கக் கூடாது.
கீழ்வரும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொண்டால், மெட்ரோனிடசோல் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்
- எச்.ஐ.வி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள்
- இரத்த உறைதல் எதிர்ப்பு மருந்துகள்
- தடுப்பூசிகள் (பி.சி.ஜி, காலரா தடுப்பூசி, டைபாய்ட் தடுப்பூசி)
- புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள்
- எத்தனால் கொண்ட மருந்துகள்
மருந்து நோய் தொடர்பு
உங்களுக்கு கல்லீரல் நோய் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். கடுமையான கல்லீரல் நோய் இருந்தால் அதை பாதிக்காத மருந்தளவை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். உங்களுக்கு
- க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசில்-தொடர்புடைய வயிற்றுப்போக்கு
- எலும்பு மஜ்ஜை
- மனச்சோர்வு
- குறைந்த இரத்த சிவப்பணு எண்ணிக்கை (இரத்த சோகை) அல்லது குறைந்த வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை (லுகோபீனியா)
- சி.என்.எஸ் கோளாறு
- கால்-கை வலிப்பு
- போர்பிரியா (இரத்தக் கோளாறு)
- புற நரம்பியல், இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சினைகள்
இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
விவரங்கள்
- இரசாயன வகுப்பு: நைட்ரோமிடாசோல்
- போதை பழக்கத்தை உருவாக்கும் மருந்து : இல்லை
- சிகிச்சை வகுப்பு : இரைப்பை குடல் சார்ந்த
- அட்டவணை “எச்” பரிந்துரைக்கப்பட்ட மருந்து : பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் சமீபத்திய முறையான பரிந்துரை இல்லாமல் இந்த மருந்தை சில்லறை மருத்துவக் கடைகள் அல்லது ஆன்லைன் மருந்தகங்களில் விற்கக்கூடாது.
- ஒளி மற்றும் ஈரப்பதம் இல்லாத இடத்தில் மருந்தை வைக்கவும்
- குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்
எந்தவொரு உடல்நலம், மருத்துவ நிலை, நோயறிதல் அல்லது சிகிச்சை குறித்து எப்போதும் மருத்துவரை அணுகவும்.
உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள், இந்தத் தளத்தில் நீங்கள் பார்த்த அல்லது படித்தவற்றின் காரணமாக அதைப் புறக்கணிக்காதீர்கள்.